வினா: சுவாமிஜி, மனிதனுக்கு புகழ் எவ்வாறு கிடைக்கும் ?
மகரிஷியின் விடை:
மனிதன் எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதில் புகழ் இல்லை. என்ன
நல்ல செயல்களை சமுதாயத்திற்கு செய்து கொண்டிருக்கிறான் என்பதில் தான் புகழ்
இருக்கிறது. புகழ் என்பது தன்முனைப்பிற்கு போடும் தூபம் அல்ல. நற்செயலின்
விளைவினால் பயனடையும் மக்கள் அன்போடு கொடுக்கும் மதிப்புணர்வே புகழாகும்.
நீங்கள் புகழைத் தேட முயற்சித்தீர்களானால் அந்த வேட்பே புகழ் உங்களை
அணுகாமல் துரத்தும் சக்தியாகும்.